பொது செய்தி

தமிழ்நாடு

புதுப்பொலிவு பெறுமா சமத்துவபுரம்?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துாரில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பழுதடைந்த சமத்துவபுர வீடுகள், புதுப்பொலிவு பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்துார் ஊராட்சியில், கடந்த 1996 - 2001ம் ஆண்டு தி.மு.க.,ஆட்சியில், 100 கான்கிரீட் வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் பயனாளிகள் தேர்வு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, வடசித்துாரில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு, பழுதடைந்த சமத்துவபுர வீடுகள், புதுப்பொலிவு பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்துார் ஊராட்சியில், கடந்த 1996 - 2001ம் ஆண்டு தி.மு.க.,ஆட்சியில், 100 கான்கிரீட் வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில் பயனாளிகள் தேர்வு மேற்கொள்ளப்பட்டு, வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.ஏறக்குறைய, 83 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில், 17 வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. ஒதுக்கீடு பெறுவதில் ஏற்பட்ட குளறுபடியால், இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது.சமத்துவபுரம் அமைக்கப்பட்டு, 22 ஆண்டுகள் ஆன நிலையில், வீடுகள் போதிய பராமரிப்பு இல்லாமல், கான்கிரீட் மேற்கூரைகள் பழுதடைந்துள்ளன. மழைக்காலத்தில், வீடுகளுக்குள் நீர்க்கசிவு ஏற்படுவதால் பராமரித்து தரும்படி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியிருப்போர் சார்பில், மனு கொடுக்கப்பட்டது.சில வாரங்களுக்கு முன், கிணத்துக்கடவு ஒன்றிய அதிகாரிகள், வடசித்துார் சமத்துவபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு, 'வீட்டுக்கூரை பராமரிப்பு, மழை நீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்தல், பொதுக்கழிப்பிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்', என, உறுதி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X