பொது செய்தி

இந்தியா

30 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கர்நாடகாவில், 30 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.மாற்றுதிறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவில் 8.62 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், 2.5 லட்சம் பேர், 45 -- 60 வயதுக்கு உட்பட்டோர்; 2.96 லட்சம் பேர் 18 - 44 வயதினர்.மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை

பெங்களூரு-கர்நாடகாவில், 30 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை தெரிவித்துள்ளது.மாற்றுதிறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கர்நாடகாவில் 8.62 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், 2.5 லட்சம் பேர், 45 -- 60 வயதுக்கு உட்பட்டோர்; 2.96 லட்சம் பேர் 18 - 44 வயதினர்.மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் பணியை ஒருங்கிணைக்க, தாலுகா அளவில் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் தன்னார்வலர்கள் மக்களை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து செல்கின்றனர்.மையங்களுக்கு செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கு சென்று தடுப்பூசி போடப்படுகிறது.ஒவ்வொரு தாலுகாவிலும் உதவி அழைப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எந்த அடையாள அட்டைகளையும் காண்பிக்க தேவையில்லை என அரசு தெரிவித்துள்ளது.மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவோர் பட்டியல் படி, அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.ஒவ்வொரு தாலுகாவிலும் யாராவது விடுபட்டிருந்தால், நோடல் அதிகாரியை அணுகலாம். அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.கிராமங்களில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பலரும் அச்சப்படுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போட அழைத்து வருவதே பெரும் சவாலாக உள்ளது.மைசூரு, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில் தடுப்பூசி போடுவதில் அதிகமான சிரமம் இருந்தது.தாவணகரேயில், 75 சதவீதம், கோலாரில், 63 சதவீதம், சிக்கபல்லாபூரில், 60 சதவீதம், பெங்களூரு நகரில், 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X