பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துங்க! எட்டு கிராம மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கேரள எல்லையை ஒட்டிய கிராமங்களை கொண்ட சொக்கனுார் ஊராட்சிக்கு, அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என, எட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தின் மேற்கு பகுதியில்,கேரள எல்லையை ஒட்டி சொக்கனுார் ஊராட்சி அமைந்துள்ளது. வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், பாலார்பதி, ரங்கேகவுண்டன்புதுார்,

கிணத்துக்கடவு:கேரள எல்லையை ஒட்டிய கிராமங்களை கொண்ட சொக்கனுார் ஊராட்சிக்கு, அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என, எட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தின் மேற்கு பகுதியில்,கேரள எல்லையை ஒட்டி சொக்கனுார் ஊராட்சி அமைந்துள்ளது. வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், பாலார்பதி, ரங்கேகவுண்டன்புதுார், கோவிந்தநாயக்கனுார், சொக்கனுார், பழனிக்கவுண்டனுார், சட்டக்கல்புதுார் என, எட்டு கிராமங்களும், முருகன்பதி, பாறை உள்ளிட்ட மூன்று மலைவாழ் மக்கள் குடியிருப்புகளும், இந்த ஊராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளன.சுமார் 6,500 மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டு, குடிநீர் குழாய் பதிக்கப்பட்டன. ஒரு சில ஆண்டுகள் குடிநீர் வினியோகிக்கப்பட்ட நிலையில், வீரப்பகவுண்டனுார், ரங்கேகவுண்டனுார் ரோடுகள் புதுப்பிக்கப்பட்டன.இதில், நிலத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் உடைந்து சேதமடைந்தன. இதனால், மேற்கு பகுதி கிராமங்களுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் செல்வதில்லை. குழாய்கள் சீரமைக்கும் பணி நடக்கவில்லை.இதுகுறித்து, சொக்கனுார் ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: ரோடு பணிகளால் குடிநீர் வினியோகம் நின்று போனது. பலமுறை தெரிவித்தும், இதுவரை குழாய் சீரமைப்பு பணிகள் நடக்கவில்லை. குறிப்பாக, பாலார்பதிக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் செல்வதில்லை. சொக்கனுாருக்கு நள்ளிரவுக்கு மேல் குடிநீர் வருவதால், சட்டக்கல்புதுாருக்கு திருப்புவதில் சிரமம் ஏற்பட்டு, குடிநீர் வீணாகிறது.எனவே, சொக்கனுார் ஊராட்சிக்கு, போதுமான குடிநீர் வழங்க திட்டம் வகுத்து, வீட்டு இணைப்புகள் வழங்கிட அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X