பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு தாலுகாக்களில் 140 பேருக்கு தொற்று: பொள்ளாச்சியில் பரவல் அதிகம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக பொள்ளாச்சி தாலுகாவில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளியம்மாள் லே அவுட், சோமசுந்தரம் லே அவுட், குமரன் நகர் இரண்டாவது லே அவுட்,



பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக பொள்ளாச்சி தாலுகாவில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளியம்மாள் லே அவுட், சோமசுந்தரம் லே அவுட், குமரன் நகர் இரண்டாவது லே அவுட், குறிஞ்சி நகர், முத்துக்குமாரசாமி லே அவுட் உள்ளிட்ட பகுதிகளில், 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோமங்கலம்புதுார், அம்பராம்பாளையம், பனமரத்துப்பாளையம், கோலார்பட்டி, மோதிராபுரம், தொழிற்பேட்டை, ராசிபட்டணம், ரெட்டியாரூர், கெட்டிமல்லன்புதுார், எஸ். சந்திராபுரம், சமத்துார், அம்மேகவுண்டனுார், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும், மாக்கினாம்பட்டி, சிங்காநல்லுார், நஞ்சேகவுண்டன்புதுாரில் தலா இரண்டு பேர், ஜமீன் ஊத்துக்குளியில் மூன்று பேர் என மொத்தம், 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜமீன்முத்துார், ராசிசெட்டிபாளையம், ஆர். கோபாலபுரம், மண்ணுார், ஓரக்களியூர், குளத்துார், ஜமீன் காளியாபுரம், சேரன் நகர், ஏ.சங்கம்பாளையம், நெகமம், போலிகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம், 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.ஆனைமலைஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார் உள்பட, 12 பகுதிகளில், 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தங்கி இருந்தவர்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.கிணத்துக்கடவுதாமரைக்குளம், ஜக்கார்பாளையம், தேவராயபுரம், கக்கடவு, கோதவாடி, வடசித்துார், தேவராடிபாளையம், கோவில்பாளையம்,தேவனாம்பாளையம், நல்லட்டிபாளையம், சூலக்கல், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு, நாயக்கன்பாளையம், லட்சுமிநகர், கொண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று, 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.வால்பாறைவால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை எஸ்டேட் பகுதியில், 8 பேருக்கும், சோலையாறு எஸ்டேட் பகுதியில் ஒருவர் என, ஒன்பது பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
-நமது நிருப .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X