பொது செய்தி

இந்தியா

சின்னதாய் சின்னதாய் செய்திகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தெரு நாய்கள் கடித்துபெண் மான் பலிவனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள், அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி கிராம வயல் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல், நேற்று பெண் மான் ஒன்று, மாலுார் பஸ் டிப்போ அருகே வந்தது. இடுகாடு பகுதியில் சூழ்ந்திருந்த தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. சம்பவ இடத்திலேயே மான் இறந்தது. வனத்துறையினர் உயிரிழந்த மானை அடக்கம்

தெரு நாய்கள் கடித்துபெண் மான் பலி

வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள், அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி கிராம வயல் பகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல், நேற்று பெண் மான் ஒன்று, மாலுார் பஸ் டிப்போ அருகே வந்தது. இடுகாடு பகுதியில் சூழ்ந்திருந்த தெருநாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. சம்பவ இடத்திலேயே மான் இறந்தது. வனத்துறையினர் உயிரிழந்த மானை அடக்கம் செய்தனர்

.குப்பைத் தொட்டிகள்

வீடுதோறும் வழங்கல்வீட்டில் சேரும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், வீட்டிலேயே சேகரித்து வைக்க, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா, இரண்டு சிறிய குப்பைத்தொட்டிகளை, பேத்தமங்களா கிராம பஞ்சாயத்து தலைவர் மம்தா நேற்று வழங்கினார்.சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் துாய்மையை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தினார்.

கேழ்வரகு விவசாயிகள்கலெக்டரிடம் வலியுறுத்தல்

மூன்று மாதங்களுக்கு முன் விவசாயிகளிடம் இருந்து அரசு, கேழ்வரகு கொள்முதல் செய்தது. ஆனால், அதற்குரிய தொகையை இன்னும் வழங்கவில்லை.கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க கோரி கோலார் மாவட்ட கலெக்டர் செல்வமணியிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இரு சக்கர வாகனம்திருடிய வாலிபர் கைதுமாலுார் நல்லுார் கிராமத்தை சேர்ந்த முருகேஷ், 28, என்பவர் பல இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்தார். அவரை கைது செய்த போலீசார், ஐந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

துணை பதிவாளர் அலுவலகம் தங்கவயலில் விரைவில் திறப்பு

தங்கவயல் சாமிநாதபுரத்தில், தங்கவயல் தாலுகா 'சப் ரிஜிஸ்டிரார் அலுவலகம்' என்ற துணை பதிவாளர் அலுவலகம் அமைக்கும் பணியை நேற்று துவக்கினர்.நான்கைந்து நாட்களுக்குள் திறப்பு விழா நடக்க உள்ளதாக தெரிகிறது. வருவாய் துறை அமைச்சர் அசோக் வருகைக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.விவசாயிகளுக்கு உரம்விதைகள் வழங்க தயார்கோலார் மாவட்டத்தில் விவசாய தொழிலுக்கு தேவையான மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு 3,166 குவிண்டால் அளவு பல்வேறு விதமான உணவு தானிய விதைகளை வழங்க மாவட்ட விவசாயத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை 1,623 குவிண்டால் விதைகள் தயாராக உள்ளன. இதனை வினியோகம் செய்ய 27 மையங்களை அமைக்கப்பட்டுள்ளன. 16 ஆயிரத்து 831 டன் உரம் வினியோகம் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X