சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகுதியானவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கோரி வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை தனக்கன்குளத்தில் தகுதியானவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மதுரை மகபூப்பாளையம் துரைப்பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு: ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க, 21 ஆண்டுகளுக்கு முன் மதுரை

மதுரை : மதுரை தனக்கன்குளத்தில் தகுதியானவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை மகபூப்பாளையம் துரைப்பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு: ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டிற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க, 21 ஆண்டுகளுக்கு முன் மதுரை தனக்கன்குளத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.அதில் 90 சதவீத இடத்தை ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் இதுவரை பயன்படுத்தவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை எனில், விதிகள்படி பட்டாவை ரத்து செய்து, தகுதியான பயனாளிகளுக்கு நிலத்தை ஒதுக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பினேன்.

தகுதியற்ற சிலருக்கு விதிகளை மீறி பட்டா வழங்க தற்போது முயற்சி நடக்கிறது. தகுதியான நபர்களை அடையாளம் கண்டு பட்டா வழங்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு துரைப்பாண்டி குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர், கலெக்டர், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X