பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் தண்ணீர் திருட்டு புகார்: வருவாய்த்துறையினர் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி அமராவதி ஆற்றில், நீர் திருட்டு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் தாலுகா பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள, இந்த ஆற்று நீரை அடிப்படையாகக்கொண்டு, 20 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்புள்ள விளைநிலங்கள் பாசன வசதி

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி அமராவதி ஆற்றில், நீர் திருட்டு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.திருப்பூர் மாவட்ட எல்லையில் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் தாலுகா பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள, இந்த ஆற்று நீரை அடிப்படையாகக்கொண்டு, 20 ஆயிரத்துக்கும் கூடுதலான ஏக்கர் பரப்புள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இது தவிர, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், குடிநீர் திட்டங்களும் இந்த ஆற்றில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆற்றுக்கு அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திற்கு முறைகேடாக நீர் திருடப்படுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மடத்துக்குளம் தாசில்தார் கனிமொழி, பழநி தாசில்தார் வடிவேல் முருகன் மற்றும் பொதுப்பணித்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர்.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், 'அமராவதி ஆற்றில் இருந்து பாசன நீர் திருடப்பட்டது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை தயார் செய்து திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X