பொது செய்தி

தமிழ்நாடு

சுய உதவி குழுக்களுக்கான கடனை செலுத்த அவகாசம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில் ஊரக,நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக நுண்நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள் கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கால் மக்களுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் வருவாய் பாதிக்கப்பட்டு தாங்கள் பெற்ற கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும்

மதுரை : மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: கொரோனா காலத்தில் ஊரக,நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக நுண்நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள் கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கால் மக்களுக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை.

இதனால் வருவாய் பாதிக்கப்பட்டு தாங்கள் பெற்ற கடனை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் நிலையில் சுய உதவி குழு உறுப்பினர்கள் இல்லை. இந்நிலையில் நுண்நிதி கடன் நிறுவனங்கள் குழுக்கள் பெற்ற கடனை தவணை தவறாமல் வட்டியுடன் செலுத்த நிர்பந்திக்கின்றனர். சில இடங்களில் கடும் நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.

எனவே சுய உதவி குழு உறுப்பினர்கள் கடனை திருப்பி செலுத்த நுண்நிதி நிறுவனங்கள் அவகாசம் வழங்க வேண்டும். கடனை செலுத்த வற்புறுத்தக்கூடாது. இதை மீறும் நுண்நிதி நிறுவனங்கள் குறித்து சுய உதவி குழு உறுப்பினர்கள் இலவச தொலைபேசி எண் 1800 102 1080 ல் புகார் அளிக்கலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X