பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா டெலி மெடிசன்' சேவையில் கல்லூரி மாணவர்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மதுரை : கொரோனா ஊரடங்கில் கல்லுாரி இயங்காவிட்டால் என்ன நாங்கள் மக்களுக்காக இயங்குகிறோம் என மதுரை மாநகராட்சி 'கொரோனா டெலி மெடிசன்' மையத்தில் சேவை செய்து வருகிறார்கள் மதுரை அமெரிக்கன், அல்ட்ரா, ஈஷா கல்லுாரி மாணவர்கள்.இதன் ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினிஸ்ரீ, பவானி தீபாலட்சுமி கூறியதாவது: டாக்டர் புவனேஸ்வரி தலைமையில் அமெரிக்கன் கல்லுாரி சார்பில் நாங்கள் உட்பட 20 பேர்,

மதுரை : கொரோனா ஊரடங்கில் கல்லுாரி இயங்காவிட்டால் என்ன நாங்கள் மக்களுக்காக இயங்குகிறோம் என மதுரை மாநகராட்சி 'கொரோனா டெலி மெடிசன்' மையத்தில் சேவை செய்து வருகிறார்கள் மதுரை அமெரிக்கன், அல்ட்ரா, ஈஷா கல்லுாரி மாணவர்கள்.

இதன் ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினிஸ்ரீ, பவானி தீபாலட்சுமி கூறியதாவது: டாக்டர் புவனேஸ்வரி தலைமையில் அமெரிக்கன் கல்லுாரி சார்பில் நாங்கள் உட்பட 20 பேர், அல்ட்ரா, ஈஷா கல்லுாரி சார்பில் தலா 3 மாணவர்கள் 'டெலி மெடிசன்' சேவையில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகளின் பட்டியல், அவர்களது அலைபேசி எண்கள் தினமும் எங்களுக்கு வரும். ஒவ்வொரும் 150 நோயாளிகள் வீதம் அலைபேசியில் உடல்நிலை, மருத்துவம், கிருமிநாசினி தெளிப்பது, உணவு, உள்ளிட்ட உதவிகள் குறித்து கேட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்வோம்.

நோயாளிகளுக்கு உதவ 84284 25000 என்ற 'ஹெல்ப் லைன்' எண்ணும் மாநகராட்சி வழங்கி உள்ளது. நோயாளி தகவல்களை அல்ட்ரா கல்லுாரி மாணவர் சுரேந்தர் உருவாக்கிய செயலி வழி பதிவு செய்கிறோம். காலை 10:00 - மதியம் 3:00 வரை சேவை செய்கிறோம். அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேராசிரியர் பாலகிருஷ்ணன், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை இச்சேவைக்கு உறுதுணையாக உள்ளனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X