அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி:அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:''ஒரு சில மாதங்களில், தமிழக மக்கள், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியவராக இருப்பர்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால், அதிகபட்சமாக, 37 ஆயிரமாக இருந்த தினசரி
 விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி:அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

திருப்பூர்:''ஒரு சில மாதங்களில், தமிழக மக்கள், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியவராக இருப்பர்,'' என, அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு பணி குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால், அதிகபட்சமாக, 37 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு, 17 ஆயிரமாக குறைந்துள்ளது.மத்திய அரசையும் தாண்டி, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். ஒரு சில மாதங்களில், தமிழக மக்கள், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியவர்களாக இருப்பர்.கிராமங்களில் ஆய்வு நடத்தியதால், கொரோனா உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. விரைவில், கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு என்று கூறிவிட்டு, தனியார் 'பார்'களை திறப்பதாக, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளது குறித்து கேட்டபோது, ''2016 தேர்தலில்தான், மதுவிலக்கு என்ற அறிவிப்பை, தேர்தல் அறிக்கையில் வைத்திருந்தோம்; அன்புமணி, பழைய புத்தகத்தை மாற்றி படித்துவிட்டு கூறியிருப்பார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விசு பாய் , சென்னை ஊசி இருப்பு 1060 என்று மாசு ஒரு பக்கம் கூவுகிறார். வீடியோ புகழ் இன்னும் சில மாதங்களில் 100% தடுப்பூசி என்று அறிக்கை. என்னவோ அடிச்சு விடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X