பொது செய்தி

இந்தியா

கல்வி கட்டணம் ரத்துமணிப்பால் நிறுவனம் அறிவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக, மணிப்பால் உயர் கல்வி அகாடமி அறிவித்தது. அகாடமியின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்த தந்தை அல்லது தாய் கொரோனாவால் இறந்திருக்கும் பட்சத்தில் அந்த மாணவர்களின் மீதமுள்ள படிப்பு

பெங்களூரு-கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக, மணிப்பால் உயர் கல்வி அகாடமி அறிவித்தது. அகாடமியின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை:கல்லுாரியில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினராக இருந்த தந்தை அல்லது தாய் கொரோனாவால் இறந்திருக்கும் பட்சத்தில் அந்த மாணவர்களின் மீதமுள்ள படிப்பு காலத்திற்கு முழு கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மணிப்பால் உயர்கல்வி அகாடமி பதிவாளர் நாராணய சபாஹித் கூறியதாவது:எங்கள் கல்வி நிறுவன மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.எல்லா சூழ்நிலைகளிலும் குறிப்பாக தொற்றுநோய்களின் சவாலான காலங்களில், எங்கள் மாணவர்களுக்கு எப்போதும் உதவியும் ஆதரவும் வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X