பொது செய்தி

தமிழ்நாடு

வன நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீலகிரியில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கூடலுார்:நீலகிரி மாவட்டம், நடுவட்டம் அருகே, வன ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஐகோர்ட் உத்தரவுபடி, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.'நீலகிரி மாவட்டம், நடுவட்டம், டி.ஆர்., பஜார் அருகே, வனப்பகுதியை ஆக்கிரமித்து, 'ரிசார்ட்' கட்டப்படுகிறது; அதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கூடலுாரை சேர்ந்த பிரபாகர், சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி,
 வன நிலத்தில் ஆக்கிரமிப்பு: நீலகிரியில் அதிகாரிகள் ஆய்வு

கூடலுார்:நீலகிரி மாவட்டம், நடுவட்டம் அருகே, வன ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஐகோர்ட் உத்தரவுபடி, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.'நீலகிரி மாவட்டம், நடுவட்டம், டி.ஆர்., பஜார் அருகே, வனப்பகுதியை ஆக்கிரமித்து, 'ரிசார்ட்' கட்டப்படுகிறது; அதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, கூடலுாரை சேர்ந்த பிரபாகர், சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.இது தொடர்பாக, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'வன நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. நீலகிரி கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, மூன்று வாரங்களில் கோர்ட்டில் அறிக்கை அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, நீலகிரி வன கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன், ஊட்டி தாசில்தார் குப்புராஜ், வனச்சரகர் சிவகுமார் உட்பட பல அதிகாரிகள் நேற்று, அப்பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பட்டா நிலத்தில் கட்டப்பட்ட கட்டடம்; அதற்கு கொண்டு வரப்பட்ட கற்கள்; வனப்பகுதியை ஆக்கிரமித்து போடப்பட்ட சாலை குறித்து ஆய்வு செய்தனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''அப்பகுதியை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. ஆய்வு முடிந்தவுடன், அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X