மதுரை : கொரோனா பரவல் குறைந்து வருவதால், கோயில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைய தொடங்கியதும் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் அலை பரவ தொடங்கியதும் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மதுரையின் சிறப்பாக பார்க்கப்படும் சித்திரை திருவிழா இரு ஆண்டுகளாக பக்தர்களின்றி நடத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பலர் இன்றும் கோயில் வாசலை தெய்வமாக கருதி தினமும் வணங்கி செல்கின்றனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தங்களை தரிசனத்திற்கு அனுமதிப்பார்களா என காத்திருக்கின்றனர்.
ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் தங்களின் மனவேதனையை கருத்திற்கொண்டு கடந்த முறைபோல் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஜூன் 11) ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அரசு அறிவிக்க உள்ள நிலையில், கோயில் தரிசனம் குறித்தும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE