சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மாணவன் ரயிலில் அடிபட்டு பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தாம்பரம்---பிளஸ் 2 மாணவன், ரயிலில் அடிபட்டு பலியானது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் காலை, செங்கல்பட்டில் இருந்து, எழும்பூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, சிறுவன் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார்,

தாம்பரம்---பிளஸ் 2 மாணவன், ரயிலில் அடிபட்டு பலியானது குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் காலை, செங்கல்பட்டில் இருந்து, எழும்பூர் நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு, சிறுவன் இறந்து கிடப்பதாக, தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், இறந்தவர் உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தவர், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, யமுனை நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் சாய் கிருஷ்ணன், 17, என தெரிய வந்தது.அவர், சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற சாய் கிருஷ்ணன், ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரின் இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X