பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டி கிடந்த நுாலகம் புது பொலிவடைந்தது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கண்ணகி நகர்--சென்னை மாநகராட்சியில், துாய்மை பணி செய்யும் 'உர்பசர்சுமித்' நிறுவனம், கண்ணகி நகரில் எட்டு ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த நுாலக கட்டடத்தை திறந்து புதுப்பொலிவடையச் செய்தது.கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள எழில் நகரில் 1,000 சதுர அடி பரப்பளவில், நுாலக கட்டடம் ஒன்று 2013ல் கட்டப்பட்டது.அப்போதிருந்த, காஞ்சிபுரம்

கண்ணகி நகர்--சென்னை மாநகராட்சியில், துாய்மை பணி செய்யும் 'உர்பசர்சுமித்' நிறுவனம், கண்ணகி நகரில் எட்டு ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த நுாலக கட்டடத்தை திறந்து புதுப்பொலிவடையச் செய்தது.கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 23 ஆயிரத்து 704 வீடுகள் உள்ளன. இங்குள்ள எழில் நகரில் 1,000 சதுர அடி பரப்பளவில், நுாலக கட்டடம் ஒன்று 2013ல் கட்டப்பட்டது.அப்போதிருந்த, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கட்டடத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம், அங்கு நுாலகம் திறக்க முன்வரவில்லை.இதனால், எட்டு ஆண்டுகளாக பயனற்ற கட்டடமாக இருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் துாய்மை பணி செய்யும் உர்பசர்சுமித் என்ற நிறுவனம், நுாலக கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முன்வந்தது.கட்டடத்தை சீரமைத்து, வர்ணம் பூசி, சுற்றி செடிகள் நட்டனர். அதோடு, மேஜை, இருக்கை மற்றும் 500 புத்தகங்களுடன், நுாலகமாக புதுப்பொலிவு அடைய செய்தனர்.சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைத்தார். கொரோனா பாதிப்பு முடிந்தபின், பகுதி நேர அடிப்படையில் ஊழியர்களை நியமித்து, நுாலகத்தை திறக்க உர்பசர்சுமித் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X