சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' மோசடி: ஒருவர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிண்டி--'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர் கார்த்திகேயன், 45. இவர், ஏப்ரல் மாதம் பணி தொடர்பான பொருட்களை வெளியூர் எடுத்து செல்ல 'ஆன்லைன்' வாயிலாக வாடகை வாகனம் தேடினார்.அப்போது 'இந்தியா மார்ட்' என்ற வர்த்தக இணையதளம் வாயிலாக மாமல்லபுரம், பூஞ்சோலை என்ற முகவரியிலான 'விநாயகா அண்டு கோ' என்ற

கிண்டி--'ஆன்லைன்' வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர் கார்த்திகேயன், 45. இவர், ஏப்ரல் மாதம் பணி தொடர்பான பொருட்களை வெளியூர் எடுத்து செல்ல 'ஆன்லைன்' வாயிலாக வாடகை வாகனம் தேடினார்.அப்போது 'இந்தியா மார்ட்' என்ற வர்த்தக இணையதளம் வாயிலாக மாமல்லபுரம், பூஞ்சோலை என்ற முகவரியிலான 'விநாயகா அண்டு கோ' என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.மறுமுனையில் பேசிய நபர், இரண்டு வாடகை வாகனங்களுக்கு முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, கூறி உள்ளார். கார்த்திகேயனும், அவர் கூறிய வங்கி கணக்குக்கு ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தினார்.பின், தொடர்பு கொண்டபோது, மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அந்த முகவரிக்கு சென்றபோது, அது போலி என தெரிந்தது. இதையடுத்து, கார்த்திகேயன் கிண்டி போலீசில் புகார் அளித்தார்.அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், பண மோசடி செய்த நபர் ஓட்டேரி, கொசப்பேட்டையை சேர்ந்த ஜெயகுமார், 48, என தெரிந்தது. இவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.திருவல்லிக்கேணியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்த இவர், தொழில் நஷ்டம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வாயிலாக முன்பணம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.வேறு யாரிடமாவது, இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X