பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணா நீர் வழங்க ஆந்திர அரசு தயக்கம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையின் குடிநீர் தேவைக்கு, ஆந்திர அரசு கிருஷ்ணா நீர் வழங்குவதில், தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.தமிழகம் - ஆந்திரா இடையிலான ஒப்பந்தப்படி, ஒவ்வோர் ஆண்டும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு, இரு தவணைகளில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அம்மாநில அரசு, விவசாய தேவை, பற்றாக்குறை உட்பட்ட பல்வேறு காரணங்களை காட்டி, முறைப்படி வழங்குவதில்லை.சென்னையின்

சென்னை-சென்னையின் குடிநீர் தேவைக்கு, ஆந்திர அரசு கிருஷ்ணா நீர் வழங்குவதில், தொடர்ந்து தாமதம் செய்து வருகிறது.தமிழகம் - ஆந்திரா இடையிலான ஒப்பந்தப்படி, ஒவ்வோர் ஆண்டும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு, இரு தவணைகளில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அம்மாநில அரசு, விவசாய தேவை, பற்றாக்குறை உட்பட்ட பல்வேறு காரணங்களை காட்டி, முறைப்படி வழங்குவதில்லை.சென்னையின் தேவைக்கு, ஆந்திர அரசு 7.65 டி.எம்.சி., வழங்கியதையடுத்து, குறிப்பிட்ட சில காரணங்களால், கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோடை தேவையை கருத்தில் வைத்து இரு மாதங்களுக்கு முன், ஆந்திர அரசிடம் கிருஷ்ணா நீர் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து, தமிழக அதிகாரிகள் உடனடியாக, ஆந்திர அரசிற்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து, குறிப்பிட்ட சில தினங்களில் அம்மாநில அதிகாரிகள் 4 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வழங்க உள்ளதாக, உறுதி அளித்தனர். ஆனால், ஆந்திர அரசு இன்னமும் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்காமல் தாமதித்து வருகிறது.இதனால், உடனடியாக கிருஷ்ணா நீரை வழங்க, ஆந்திர அரசிற்கு தமிழக அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X