பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் 7,111 பேர் வேலைக்கு தேர்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு--எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவன மாணவர்கள், 7,111 பேர், முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வழிகாட்டி மைய இயக்குனர் வெங்கடசாஸ்திரி தெரிவித்துள்ளார்.இது குறித்து, வெங்கடசாஸ்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நாட்டின்

செங்கல்பட்டு--எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவன மாணவர்கள், 7,111 பேர், முன்னணி தனியார் நிறுவனங்களில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வழிகாட்டி மைய இயக்குனர் வெங்கடசாஸ்திரி தெரிவித்துள்ளார்.இது குறித்து, வெங்கடசாஸ்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது, 'நாக்' அமைப்பின் உயரிய, 'ஏ' அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும்.சர்வதேச அளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனத்திற்கு வழங்கப்படும், இங்கிலாந்து நாட்டின், 'க்யூஎஸ்' அமைப்பின், '4 ஸ்டார்' அந்தஸ்து பெற்ற நிறுவனமாக விளங்குகிறது. மேலும், இங்கு பயிலும் மாணவ - மாணவியருக்கு, முன்னணி நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெற்று தருவதில், சாதனை படைத்து வருகிறது.கடந்த, 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான நியமன தேர்வு, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முன்னணி நிறுவனங்களான, 'அமேசான், நீல்சன், அதானி குரூப்' உள்ளிட்ட, 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.இதில், 'வொர்க் இந்தியா' ஐ.டி., நிறுவனம், அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 35 லட்சம் ரூபாய் சம்பளத்துடன் பணி நியமனம் செய்தது. அதேபோல், ஐந்து லட்சம் ரூபாய் - 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான ஊதியத்துடன், 2,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.ஒரே நாளில் நடத்திய பணி நியமன வளாக தேர்வில், காக்னிசன்ட் - 1,018; டி.சி.எஸ்., - 983; விப்ரோ - 634; இன்போசிஸ் - 602 பேர் என, மொத்தம், 7,111 பேர், பணி நியமனம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X