பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கையருக்கு நிவாரணம் வழங்கும் பணி விறுவிறு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை-வாழ்வாதாரமின்றி தவிக்கும் திருநங்கையருக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.கொரோனா பரவலை தடுக்க, சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால், பெரும்பாலான திருநங்கையர் வாழ்வாதாரமின்றி அவதிப்படுகின்றனர்.இவ்வாறு சிரமப்படும் திருநங்கையருக்கு 2,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை

சென்னை-வாழ்வாதாரமின்றி தவிக்கும் திருநங்கையருக்கு, கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.கொரோனா பரவலை தடுக்க, சென்னையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால், பெரும்பாலான திருநங்கையர் வாழ்வாதாரமின்றி அவதிப்படுகின்றனர்.இவ்வாறு சிரமப்படும் திருநங்கையருக்கு 2,000 ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அதன்படி, சென்னையில் திருநங்கையருக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.இது குறித்து, நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், நலத்துறையில் பதிவு செய்து அடையாள அட்டையுடன் 2,547 திருநங்கையர் உள்ளனர். முதல்வர் உத்தரவின்படி, இவர்களின் வீடுகளுக்கே சென்று நிவாரணத் தொகை வழங்கி வருகிறோம். நேற்று வரை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு வழங்கப்பட்டு உள்ளன.அதேபோல், அடையாள அட்டை இல்லாதோர் குறித்து, விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X