பொது செய்தி

தமிழ்நாடு

பற்றாக்குறை பகுதிகளில் கூடுதல் குடிநீர்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை-- சென்னையில், குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, 1.6 கோடி லிட்டர் நீர் கூடுதலாக வழங்கும் பணியில், வாரியம் ஈடுபட்டுள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் வாரியம் சார்பில், தினசரி, 83 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தட்டுப்பாடு காரணமாக குறைந்தபட்சமாக, 45 முதல் அதிகபட்சமாக, 70 கோடி லிட்டர் வரை

சென்னை-- சென்னையில், குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து, 1.6 கோடி லிட்டர் நீர் கூடுதலாக வழங்கும் பணியில், வாரியம் ஈடுபட்டுள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் வாரியம் சார்பில், தினசரி, 83 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, தட்டுப்பாடு காரணமாக குறைந்தபட்சமாக, 45 முதல் அதிகபட்சமாக, 70 கோடி லிட்டர் வரை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்ளிட்ட, நீராதாரங்கள் நிரம்பியதால், கடந்தாண்டு இறுதியில் இருந்து, தொடர்ந்து முழு அளவில், குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறை அதிகம் உள்ள வட சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டறிந்து, அங்கு கூடுதல் குடிநீர் வினியோகிக்கும் பணியில், வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சமீபத்தில், குடிநீர் வினியோகம், 83 கோடி லிட்டரில் இருந்து, 84 கோடி லிட்டராக அதிகரித்தது.தற்போது, குடிநீர் வினியோகம் மீண்டும், 60 லட்சம் லிட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தினசரி வினியோகம், 84.6 கோடி லிட்டராக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X