பொது செய்தி

தமிழ்நாடு

கிண்டி சிறுவர் பூங்கா உயிரினங்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை--கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள உயிரினங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென, உயரதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் மான், ஓநாய், நரி, முதலை, பாம்பு, பறவைகள் என, 55 வகையான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்து, 'நீலா'

சென்னை--கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள உயிரினங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென, உயரதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் மான், ஓநாய், நரி, முதலை, பாம்பு, பறவைகள் என, 55 வகையான வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வண்டலுார் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்து, 'நீலா' என்ற பெண் சிங்கம் பலியானது.இதே போல, சென்னையின் மைய பகுதியில், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளதால், வண்டலுார் பூங்காவில் நடந்த சம்பவம் போல் நடக்காமல் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்க, உயரதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.எப்போதும், கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும்; உடல் சோர்வுடன் இருக்கும் உயிரினங்களை தனிமைப்படுத்தி, தேவையான பரிசோதனை செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.மேலும், பூங்கா ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு உடல் நலம் பாதித்தால், உடனே கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X