பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் 2,081 பேருக்கு தடுப்பூசி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில், 2,081 மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், அவர்களது வீடுகளில் சென்று தடுப்பூசி போடப்படுகிறது. சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, சென்னையில்

சென்னை-சென்னையில், 2,081 மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், அவர்களது வீடுகளில் சென்று தடுப்பூசி போடப்படுகிறது. சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, சென்னையில் இதுவரை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகளை, மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.அந்த வகையில், வீடுகள் மற்றும் முகாம்களில் சேர்த்து இதுவரை, 2,081 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் 1800 4250 111 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X