பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி செய்திகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கோயம்பேடு: கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில், கோயம்பேடு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோயம்பேடு நோக்கி செல்லும் ஒரு வழிச்சாலையில், விதிமீறி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கினர். இதனால், அந்த நபர் போலீசாரிடம் தகாத வார்த்தைகள் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த நபரை போலீசார்

போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கோயம்பேடு: கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில், கோயம்பேடு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோயம்பேடு நோக்கி செல்லும் ஒரு வழிச்சாலையில், விதிமீறி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கினர். இதனால், அந்த நபர் போலீசாரிடம் தகாத வார்த்தைகள் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மொபைல் போன் திருடன் கைதுசைதாப்பேட்டை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார், 62, மனைவி ஜெயந்தி, 57; தாம்பரம் விமானப்படை தள அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். இவர், கடந்த, 7ம் தேதி மாலை பணி முடிந்து, தாம்பரத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்ற போது, குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய வாலிபர், ஜெயந்தியின் மொபைல் போனை பறித்து தப்பினார். புகாரை விசாரித்த தாம்பரம் ரயில்வே போலீசார், நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை, சாஸ்திரி காலனி, முதல் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 19 என்பவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு 'போக்சோ'தாம்பரம்: பம்மல், நாகல்கேணியைச் சேர்ந்தவர் ரஹீம், 24. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, உறவினர் மகளான, 14 வயது சிறுமியை காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன், சிறுமி வீட்டில் சென்று, அவரை திருமணம் செய்வதற்காக ரஹீம் பெண் கேட்டுள்ளார். 18 வயது நிறைவடையும் வரை காத்திருக்குமாறு, ரஹீமிடம் சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில், சிறுமி இரண்டு மாத கர்ப்பமானார். கருவை கலைக்க அவரது பெற்றோர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமியிடம் விசாரித்த டாக்டர்கள், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், ரஹீமை நேற்று, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.ரவுடிகள் 6 பேர் கைதுகாசிமேடு: காசிமேடு, ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன், 42, நேற்று காசிமேடு, ஜி.என்.செட்டி தெரு வழியாக நடந்து சென்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட முயன்றனர்.காசிமேடு போலீசார் விசாரித்ததில், பிரபல ரவுடிகளான காசிமேடு, காசிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார், 19; தேசப்பன், 32, காசிமேடு, பவர்குப்பத்தை சேர்ந்த ராமு, 22; புருஷோத்தமன், 21; காசிமேடு, புதுமனை குப்பத்தை சேர்ந்த சுரேந்தர், 24; காசிமேடு, ராசிபுரத்தை சேர்ந்த அஸ்வின் குமார், 20 ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. ஆறு பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.வாலிபரை தாக்கிய மூவர் கைதுஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, சிருங்காச்சாரி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 21. இவர், நேற்று முன்தினம் முத்தியா தோட்டம் வழியாக நடந்து சென்றார். அப்போது, ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்து, போதை மாத்திரை வாங்கி தரக்கோரினர். அதற்கு அவர், 'உடனே பணம் கொடுத்தால் வாங்கி தருகிறேன்' என்றார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், கார்த்திக் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பினர். இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்தனர். இதில், சுரேஷ், 40, தினேஷ், 23, அருண், 20, உட்பட, ஐந்து பேர் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று மூவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள, இருவரை தேடி வருகின்றனர்.கஞ்சா சிக்கியதுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரையம்பட்டு, விளையாட்டு மைதானம் அருகே, கஞ்சா விற்பனை நடப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், ரோந்து போலீசார் கண்காணித்தனர். நேற்று நள்ளிரவு, 1:00 மணி அளவில், மேற்கண்ட இடத்தில், சிலர் கும்பலாக இருந்தனர்.அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பினர். அங்கிருந்த, இரு சக்கர வாகனம், 98 பொட்டலம் கஞ்சா, மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.இலவச உணவு வினியோகம்சூளைமேடு: சென்னையில் நேற்று சூளைமேடு, அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையோரவாசிகள் நுாற்றுக்கணக்கானோருக்கு, 'தடம் பவுண்டேஷன்' சார்பில், இலவசமாக உணவும் குடிநீரும் வழங்கப்பட்டது.லெவல் கிராசிங் விழிப்புணர்வுசென்னை: ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 10ம் தேதி, சர்வதேச லெவல்கிராசிங் விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சாலையில் வருபவர்கள் ரயில்வே கேட்டுகளில், தண்டவாளத்தை கடக்கும் போது, கவனத்துடன், பாதுகாப்பாக கடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ரயில்வே ஊழியர்களால் விழிப்புணர்வு வழிகாட்டுதலுடன், பிரசாரமும் செய்யப்பட்டது.சிறுமியருக்கு தொந்தரவு: ஒருவர் கைதுபூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 49; டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமியரை, பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.இது சம்பந்தமாக, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.திருடர்களுக்கு போலீஸ் வலை வீச்சுசென்னை: பெரியமேடு மாட்டுக்கார வீரபத்திரன் தெருவில் உள்ள, எம்.எம்.ஸ்டோர் என்ற கடையின் ஷட்டரை உடைத்து, மர்ம நபர்கள், 35 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.இதையடுத்து, பெரியமேடு பெரியண்ணன் மேஸ்திரி தெருவில், சூப்பர் மார்க்கெட் கடையின் பூட்டை உடைத்து, 5,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 3,500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். பல கடைகளில் கை வரிசை காட்டியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X