சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை--குரோம்பேட்டையில், 4 வயது சிறுவன், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தான்.குரோம்பேட்டை, நாகல்கேணி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். துணிகளுக்கு அயனிங் போடும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் சர்வேஷ், 4. நேற்று காலை, சர்வேஷ், வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவனை காணவில்லை. மகனை காணவில்லை என, அவரது தாய்

குரோம்பேட்டை--குரோம்பேட்டையில், 4 வயது சிறுவன், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, பரிதாபமாக உயிரிழந்தான்.குரோம்பேட்டை, நாகல்கேணி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். துணிகளுக்கு அயனிங் போடும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் சர்வேஷ், 4. நேற்று காலை, சர்வேஷ், வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவனை காணவில்லை. மகனை காணவில்லை என, அவரது தாய் சரஸ்வதி பல இடங்களில் தேடினார்.அப்போது, அங்குள்ள பாலாறு தண்ணீர் தொட்டியில், சர்வேஷ் விழுந்தது தெரிய வந்தது. சர்வேஷை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், சிறுவன் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து, குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X