பொது செய்தி

இந்தியா

பசிப்போருக்கு உணவளிக்க 'லஞ்ச் பாக்ஸ்' திட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பாலக்காடு : பசிப்போருக்கு உணவளிக்கும், 'லஞ்ச் பாக்ஸ்' திட்டம், பாலக்காட்டில் செயல்படத் துவங்கியுள்ளது.கொரோனா தொற்று பரவல் பாதிப்பு காரணமாக, பலர் உணவின்றி தவிக்கின்றனர். பசிப்போருக்கு உணவளிக்கும், 'லஞ்ச் பாக்ஸ்' திட்டத்தை, பாலக்காட்டில் பெண்களின் கூட்டமைப்பான ஐ.என்.ஏ., மற்றும் டி.டபிள்யூ.சி.எ., ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.நகராட்சி பஸ் நிலையம், ஸ்டேடியம் பஸ்
 பசிப்போருக்கு உணவளிக்க 'லஞ்ச் பாக்ஸ்' திட்டம்

பாலக்காடு : பசிப்போருக்கு உணவளிக்கும், 'லஞ்ச் பாக்ஸ்' திட்டம், பாலக்காட்டில் செயல்படத் துவங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் பாதிப்பு காரணமாக, பலர் உணவின்றி தவிக்கின்றனர். பசிப்போருக்கு உணவளிக்கும், 'லஞ்ச் பாக்ஸ்' திட்டத்தை, பாலக்காட்டில் பெண்களின் கூட்டமைப்பான ஐ.என்.ஏ., மற்றும் டி.டபிள்யூ.சி.எ., ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.

நகராட்சி பஸ் நிலையம், ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலக பகுதி என, 10 இடங்களில் 'லஞ்ச் பாக்ஸ்' பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. தினமும் மதியம் ஒவ்வொரு பெட்டியிலும், தலா 30 வீதம் 300 உணவு பார்சல் வைக்கப்படும்.

ஐ.என்.ஏ., அமைப்பின் மாவட்டத் தலைவர் ஷீனா சிவதாஸ் கூறுகையில், ''ஊரடங்குக்கு பிறகும் இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவெடுத்துள்ளோம். உணவு அளிக்க விரும்புவோர் 81293 18445, 98465 47504 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X