யானைக்கவுனி ரயில்வே பால கட்டுமான பணியை, துரிதப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே, 87 ஆண்டு பழமை வாய்ந்த, யானைக்கவுனி ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு, 43 கோடி ரூபாய் செலவில், புதிய பாலத்திற்கான கட்டுமான பணி, 2019ல் துவங்கியது.சிரமம்கொரோனா தாக்கத்தால், இரண்டு முறை பணி நிறுத்தப்பட்டு, பின் கட்டுமான பணிகள் நடந்து வந்தன.
சட்டசபை தேர்தல் நேரத்தில், ஆட்கள் பற்றாக்குறையால், பணி தடைபட்டது. இந்நிலையில், பணிகளை துரிதப்படுத்த முயன்றபோது, கொரோனா, இரண்டாவது அலை பரவியது. தொழிலாளர்கள் பணிக்கு வராததால், மந்த கதியில் பணி நடந்து வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் பணிகளை துரிதப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கட்டுமான பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கொரோனா தாக்கத்தால், வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. கட்டுமான செலவும் அதிகரித்துள்ளது. தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் கேட்கின்றனர். அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது சிரமம்.இயக்கம்கொரோனா காரணமாக, சென்ட்ரலில் இருந்து குறிப்பிட்ட ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாலம் கட்டும் இடத்தில், கட்டுமான பிரிவினர் தாமதமின்றி பணி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரமாண்ட இயந்திரங்களால், தண்டவாளத்தையொட்டி, தரைக்கு கீழ் துளையிட்டு, கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி, தரைமட்டம் வரை முடிக்கப்பட்டுள்ளது.
தரைக்கு மேல், இயந்திரங்கள் உதவியுடன் பணி தொடர்கிறது.ஊரடங்கு தளர்வுக்கு பின், எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, இந்த ரயில் பாதை வழியாக, முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கும் நிலை ஏற்படும். ரயில் போக்குவரத்து அதிகமில்லாத இரவு நேரத்தில் தான், அதிகமான பணிகள் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும்.நிர்ணயம்இவ்வாண்டு இறுதிக்குள், பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்கள், தளவாடங்கள் தட்டுப்பாடு இல்லை. கொரோனா பாதிப்பு, மழை காலத்தில் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு அதிகமானால், கட்டுமான பணி பாதிக்கும்.எப்படி இருந்தாலும், 2022 மார்ச்சுக்குள் பணி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினர்
- -நமது நிருபர் -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE