பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய பணி தீவிரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை--கோடை மழை பெய்துவரும் நிலையில், அடுத்த பருவத்திற்கான நடவு பணிகளில், விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், கரும்புக்கு அடுத்தபடியாக, நெல் மற்றும் மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வாரங்களாக, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.இதனால், வயல்வெளிகள் உழுவதற்கு

ஆர்.கே.பேட்டை--கோடை மழை பெய்துவரும் நிலையில், அடுத்த பருவத்திற்கான நடவு பணிகளில், விவசாயிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை சுற்றுப் பகுதியில், கரும்புக்கு அடுத்தபடியாக, நெல் மற்றும் மலர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வாரங்களாக, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது.இதனால், வயல்வெளிகள் உழுவதற்கு ஏற்ப ஈரப்பதத்துடன் காணப்படுகின்றன.இந்த சந்தர்ப்பத்தில், அடுத்த பருவத்திற்கானநெல் நடவு பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் தேவைக்கேற்ப இருந்தாலும், மழை பெய்து, வாய்க்கால் பாசனம் செய்வதில் கிடைக்கும் திருப்தி வேறு எந்த பாசனத்திலும் கிடைப்பது இல்லை.மேலும், கோடை மழையால், மல்லிகை தோட்டங்களை காட்டிலும், முல்லை தோட்டங்களில் அதிகளவில் அரும்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன.திருமண விழாக்களும் ஏராளமாக நடைபெற்று வரும் சூழலில், பூந்தோட்டங்கள் மூலமாக விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X