பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா, கள்ள மது விற்பனையா: எஸ்.பி.,க்கு புகார் அளிக்கலாம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கள்ள மது விற்பனை குறித்து, எஸ்.பி.,க்கு நேரடியாக மொபைல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.திருவள்ளூர் எஸ்.பி., வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட மருந்தகங்களில், தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டின்படி இளைஞர்கள் சிலர் பெற்று, அதை மாற்று போதை பொருட்களாக

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் கள்ள மது விற்பனை குறித்து, எஸ்.பி.,க்கு நேரடியாக மொபைல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.திருவள்ளூர் எஸ்.பி., வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட மருந்தகங்களில், தடை செய்யப்பட்ட இருமல் மருந்துகளை, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டின்படி இளைஞர்கள் சிலர் பெற்று, அதை மாற்று போதை பொருட்களாக பயன்படுத்துகின்றனர். பல தருணங்களில் இத்தகைய மருந்துகளை உட்கொள்வதால் உயிரிழப்பு கூட ஏற்பட்டுள்ளன.எனவே, சமுதாய அக்கறை இன்றி வியாபார நோக்கோடு செயல்படும்மருந்தகங்கள் மீது, குற்றநடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், போலி மதுபானங்களை சில்லரையாகவோ, மொத்தமாகவோ சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்கள் மீதும் கஞ்சா போன்ற போதை தரும் வஸ்துகளை விற்பனை செய்பவர்கள் மீதும், கடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அவர்களுக்கு உடந்தையாக செயல்படுபவர் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள், தங்கள் பகுதியில் எவரேனும் போதைக்கு அடிமையாக்கும் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், 63799 04848 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X