பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
விழிப்புணர்வுதிருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி, திருவள்ளூர் நகராட்சியை ஒட்டி உள்ளது. இங்கு, கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியாக, நேற்று ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.பின், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கபசுர குடிநீர் அருந்துமாறும் விழிப்புணர்வு

விழிப்புணர்வுதிருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி, திருவள்ளூர் நகராட்சியை ஒட்டி உள்ளது. இங்கு, கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியாக, நேற்று ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

பின், கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கபசுர குடிநீர் அருந்துமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.உயர்கோபுர மின்விளக்குஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சியில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

ஒன்றிய கவுன்சிலர் குழந்தைவேலுவின், மேம்பாட்டு நிதியின் மூலம் அங்குள்ள லட்சுமிநாதபுரம் பகுதியில் அமைத்த உயர்கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் ரமேஷ் துவக்கி வைத்தார்.

புது மின்மாற்றி இயக்கிவைப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், 200 படுக்கை வசதிகளுடன், கொரோனா சிகிச்சை மையம், கடந்த வாரம் துவக்கப்பட்டது.

இம்மையத்திற்கு தடையின்றி, சீராக மின்சாரம் வழங்க காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மின் வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, இம்மையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்த, 100 கிலோவாட் திறன்கொண்ட மின்மாற்றியை அகற்றிவிட்டு, 250 கிலோவாட் திறன்கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

அதேபோல், ஆனந்தாபேட்டையிலும், 250 கிலோவாட் திறன் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இரு மின்மாற்றிகளையும், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று இயக்கி வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

தன்னார்வ நிறுவனம் உதவிமாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சமூகம் மற்றும் கல்வி ஆகிய சேவைகளுக்கான, 'சீ' தன்னார்வ நிறுவனம் இயங்குகிறது. கொரோனா தொற்று தடுப்பு கருதி, இந்நிறுவனம், சதுரங்கப்பட்டினம், நெரும்பூர், வல்லிபுரம் ஆகிய பகுதிகளின் ஆரம்ப சுகாதார மையங்கள் பயன்பாட்டிற்காக, 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 450 கவச உடைகள், 2,000 என் - 95 முக கவசங்கள், 9,000 கையுறைகளை என வழங்கியது.

நிறுவன இயக்குனர் தேசிங்கு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லுாயிஸ் முன்னிலையில், வட்டார மருத்துவ அலுவலர் கவிதாவிடம், இவற்றை நேற்று முன்தினம் வழங்கினார்.

கொரோனா நோயாளிகளுக்கு உணவுவாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் உள்ளது. இங்கு, 15 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு, சமீபத்தில் துவக்கப்பட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் தங்கி இருப்போருக்கு, உணவு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிந்தவாடி குரு கோவில் என அழைக்கப்படும், தட்சிணாமூர்த்தி கோவில் அன்னதானம், பரந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும், கொரோனா வார்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

3 பி.டி.ஓ.,க்கள் பணி இடமாற்றம்செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், புனிததோமையார்மலை, மதுராந்தகம், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில், மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிர்வாக காரணங்களுக்காக, பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் ஜான்லுாயிஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, புனிததோமையார் மலைக்கும்; புனிததோமையார் அலுவலர் சிவகலைச்செல்வன் லத்துாருக்கும்; மாவட்ட ஊராட்சி முகமை அலுவலர் சிவகுமார், மதுராந்தகத்திற்கும் மாற்றப்பட்டார்.

மானாவாரி உழவுக்கு 50 சதவீதம் மானியம்திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின்கீழ் 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில், கோடை உழவு மற்றும் சிறுதானியம், பயறு, எண்ணெய்வித்து பயிர்களுக்கு 50 சதவீதம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

விருப்பம் உள்ள விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் மற்றும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நிலத்தின் சிட்டா, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கோடை உழவுக்கு ௨.௫ ஏக்கருக்கு 1,250 ரூபாய் வழங்கப்படும். தற்போது தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ளதால், இம்மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து, சிறுதானியங்கள், பயறு வகைகளை பயிரிட்டு பயன்பெறுமாறு, வேளாண் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

'கிருமி நாசினி அனுப்புவதில் பாகுபாடு'ஊத்துக்கோட்டை: திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,க்கள் வி.ஜி.ராஜேந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராசன் பேசுகையில், ''கும்மிடிப்பூண்டியில், ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்ட இடத்தில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். மக்களுக்கு உணவு, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது'' என்றார்.

திருவள்ளூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசுகையில், ''ஊரடங்கில் கட்சி பாகுபாடின்றி, மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்றினால் தான், கொரோனா தொற்றில் இருந்து மீள முடியும்.

''பூண்டி ஒன்றியத்தில், சில ஊராட்சிகளுக்கு, கிருமி நாசினி அதிகமாகவும், சில ஊராட்சிகளுக்கு மிக குறைந்தளவும் அனுப்பப்படுகிறது.

''அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு அனுப்ப வேண்டும். ஊராட்சிகளின் தேவைகளை எங்களிடம் கூறினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X