பொது செய்தி

தமிழ்நாடு

சுடுகாடு வசதியில்லாமல் ஆதரவற்றோர் இல்லம் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சோழவரம்--ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மனநல காப்பகத்திற்கு, சுடுகாடு வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்களுடன் புதைக்க இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.சோழவரம் அடுத்த திருநிலை கிராமத்தில், அரசு உதவியுடன், அன்பகம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மனநல காப்பகம் செயல்படுகிறது. இங்கு, 230 முதியோர் மற்றும் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.இங்கு நோய் வாய்ப்பட்டு

சோழவரம்--ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மனநல காப்பகத்திற்கு, சுடுகாடு வசதி இல்லாததால், இறந்தவர்களின் சடலங்களுடன் புதைக்க இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.சோழவரம் அடுத்த திருநிலை கிராமத்தில், அரசு உதவியுடன், அன்பகம் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மனநல காப்பகம் செயல்படுகிறது. இங்கு, 230 முதியோர் மற்றும் மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.இங்கு நோய் வாய்ப்பட்டு இறக்கும் ஆதரவற்றவர்களை புதைக்க, உள்ளூர் சுடுகாட்டில் அனுமதிக்கப்படுவதில்லை. சென்னை காசிமேடு, மூலக்கொத்தளம் என, பல்வேறு சுடுகாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.ஆதரவற்றவர்களுக்கு உள்ளூரில் தனி சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பல ஆண்டுகளாக தொண்டு நிறுவனத்தினர், வருவாய் துறையிடம் முறையிட்டு வருகின்றனர்.ஒரு வாரத்திற்கு முன், இங்குள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 62 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதில், உடல்நிலை மோசமாகி, ஐந்து பேர் இறந்து விட்டனர்.இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் தேடி, தொண்டு நிறுவனத்தினர் அலைக்கழிக்கப்பட்டனர். பின், சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.20 ஆண்டுகளாக சுடுகாடு வசதி கிடைக்காமல், ஆதரவற்றோர் இல்லம் தவித்து வருகிறது.திருநிலை கிராமத்தில், தனி சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர, தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X