வீணாகும் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகும் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள்

Added : ஜூன் 11, 2021
Share
கடம்பத்துார்----கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள் வீணாகி வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சித் துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 43

கடம்பத்துார்----கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள் வீணாகி வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சித் துறையினர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளிலும், விழிப்புணர்வு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படாமல் அலுவலகத்தில் கட்டு கட்டாக வைக்கப்பட்டு உள்ளது.எனவே, கொரோனா விழப்புணர்வு பிரசுரங்களை வினியோகிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள், ஊராட்சி நிர்வாகம் மூலம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X