பொது செய்தி

தமிழ்நாடு

மஸ்துார் பணியாளர் நியமனத்தில் குழப்பம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கடம்பத்துார்--கடம்பத்துார் ஒன்றியத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக மஸ்துார் பணியாளர்களை நியமனம் செய்வதில், கடும் குழப்பம் நிலவி வருகிறது.ஊரக பகுதியில் டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஏற்கனவே பணிபுரியும் மஸ்துார் ஊழியர்களுடன், கூடுதலாக 15 - 30 தற்காலிக மஸ்துார் பணியாளர்களை நியமனம் செய்ய, கலெக்டர் பொன்னையா,

கடம்பத்துார்--கடம்பத்துார் ஒன்றியத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக மஸ்துார் பணியாளர்களை நியமனம் செய்வதில், கடும் குழப்பம் நிலவி வருகிறது.ஊரக பகுதியில் டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஏற்கனவே பணிபுரியும் மஸ்துார் ஊழியர்களுடன், கூடுதலாக 15 - 30 தற்காலிக மஸ்துார் பணியாளர்களை நியமனம் செய்ய, கலெக்டர் பொன்னையா, கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.இதையடுத்து, கடம்பத்துார் ஒன்றியத்தில், ஏற்கனவே உள்ள 10 மஸ்துார் பணியாளர்களுடன், கூடுதலாக, 20 தற்காலிக மஸ்துார் பணியாளர்களை தேர்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், கடம்பத்துார் ஒன்றியத்தில், 30 தற்காலிக பணியாளர்களையும், புதியவர்களாக நியமனம் செய்ய வேண்டும் என, ஒன்றிய குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்வு செய்யும் பணி நடந்தது.இதற்கு, ஏற்கனவே பணியிலிருந்த, 10 பணியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் தேர்வில் குழப்பம் நிலவுவதால், ஊராட்சி பகுதியில், கொசு ஒழிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் ஊராட்சிகள் தவித்து வருகின்றன.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் நியமனம் செய்வது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, விரைவில் தற்காலிக மஸ்துார் பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' எனக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X