பழவேற்காடு மீன் இறங்குதளத்தில் கூட்டம் கொரோனா தொற்று பரவும் அபாயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பழவேற்காடு--பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில், மீன் வாங்குவது, விற்பது என, மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதுடன், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தற்போது தளர்விற்கு பின், இரு நாட்களாக, பழவேற்காடு பகுதி மீனவர்கள், கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.மீன் இறங்குதளம் பகுதிக்கு கொண்டு வரப்படும் மீன்களை,

பழவேற்காடு--பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில், மீன் வாங்குவது, விற்பது என, மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதுடன், விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.தற்போது தளர்விற்கு பின், இரு நாட்களாக, பழவேற்காடு பகுதி மீனவர்கள், கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.மீன் இறங்குதளம் பகுதிக்கு கொண்டு வரப்படும் மீன்களை, வியாபாரிகள் வாங்கி, அதே பகுதியில் விற்பனை செய்கின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால், பழவேற்காடில் மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை. மீன் மார்க்கெட், இறங்குதளம் வெறிச்சோடி இருந்தது.தற்போது, அங்கு மீன்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்து, அவற்றை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு சென்று குவிகின்றனர்.பொதுமக்கள், மீனவர்கள், வியாபாரிகள் என, மீன் இறங்குதளம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இவர்கள், கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசங்களை சரிவர அணியாமலும் இருக்கின்றனர்.ஒரு வாரமாக மீஞ்சூர் வட்டாரத்தில் தொற்று பரவல், தினமும், 25க்கும் குறைவாக இருந்து வருகிறது. பழவேற்காடு பகுதியில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் கூடுவதால், தொற்று பரவல் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.மீன் இறங்குதளம் பகுதியில் சமூக இடைவெளியுடன், விற்பனை கடைகள் அமைக்கவும், அங்கு வருபவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X