பொது செய்தி

தமிழ்நாடு

15 கடைகளுக்கு அபராதம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருத்தணி-ஊரடங்கின் போது, அரசு விதிமுறைகளை மீறி, மொபைல் போன் கடைகள் உட்பட, திறந்திருந்த, 15 கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், வரும், 14ம் தேதி வரை அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதில், காய்கறி, மளிகை, பலசரக்கு, பூ மற்றும் பழக்கடைகள் ஆகியவைக்கு தளர்வுகள் அளித்து திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள கடைகள் திறக்க

திருத்தணி-ஊரடங்கின் போது, அரசு விதிமுறைகளை மீறி, மொபைல் போன் கடைகள் உட்பட, திறந்திருந்த, 15 கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால், வரும், 14ம் தேதி வரை அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதில், காய்கறி, மளிகை, பலசரக்கு, பூ மற்றும் பழக்கடைகள் ஆகியவைக்கு தளர்வுகள் அளித்து திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ள கடைகள் திறக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில், திருத்தணி நகராட்சியில், அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை, சித்துார் சாலை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அரசு விதிமுறைகள் மீறி, இரண்டு மொபைல் போன் கடைகள்.மூன்று ஜவுளி கடைகள், காலணி கடைகள் உட்பட மொத்தம், 15 கடைகளின் உரிமையாளர்கள் திறந்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர்.நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் சென்று மேற்கண்ட கடைகளுக்கு, 1,000 - 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.மேலும், இனிவரும் காலங்களில், அரசு உத்தரவை மீறி கடைகள் திறந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என, ஆணையர் எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X