பொது செய்தி

தமிழ்நாடு

கல்பாக்கம் - புதுப்பட்டினம் வாகனம் செல்ல தடை விதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்-கல்பாக்கம் - புதுப்பட்டினத்தில் வாகன நெரிசலை தவிர்க்க, வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதி, குறுகிய வர்த்தக பகுதியாக அமைந்துள்ளது. அணுசக்தி துறையினர், சுற்றுப்புற பகுதியினர், இங்கு பொருட்கள் வாங்குகின்றனர்.கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, பெரும்பாலான கடைகள் இயங்கி,

மாமல்லபுரம்-கல்பாக்கம் - புதுப்பட்டினத்தில் வாகன நெரிசலை தவிர்க்க, வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் - புதுப்பட்டினம் பகுதி, குறுகிய வர்த்தக பகுதியாக அமைந்துள்ளது. அணுசக்தி துறையினர், சுற்றுப்புற பகுதியினர், இங்கு பொருட்கள் வாங்குகின்றனர்.கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, பெரும்பாலான கடைகள் இயங்கி, பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனர். குறுகிய சாலைகளில், இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாடின்றி இயக்கப்பட்டதால் நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, கல்பாக்கம் நகரிய நுழைவாயில், புதுப்பட்டினம் பகுதி முக்கிய சாலைகள் நுழைவிடங்களை, போலீசார் அடைத்தனர். அடைப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்தி, கடைகளுக்கு நடந்து செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்கள், வாகன நெரிசலின்றி எளிதாக கடந்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X