பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வரிடம் மனு அளிக்காதோருக்கும் பட்டா வழங்க மக்கள் கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருப்போரூர்--திருப்போரூர் வட்டத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில், மனு அளிக்க தவறியவர்களுக்கும் பட்டா வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் சென்று, மனுக்கள்

திருப்போரூர்--திருப்போரூர் வட்டத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில், மனு அளிக்க தவறியவர்களுக்கும் பட்டா வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் சென்று, மனுக்கள் பெற்றார். தி.மு.க., ஆட்சி அமைத்ததும், பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தமாக, நடவடிக்கை எடுத்து வருகிறார்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய பல பகுதியில், இலவச வீட்டு மனை பட்டா கோரி, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில், பலரும் விண்ணப்பித்தனர். இம்மனுக்கள் சம்பந்தமாக, வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், தகுதியுடைய மனுதாரர்களுக்கு, உதவி கிடைக்க பரிந்துரை செய்யப்படுகிறது.ஆனால், மற்றவர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.இது குறித்து, பட்டாக்களை எதிர்நோக்கும் கிராமத்தினர் கூறியதாவது:தேர்தலுக்கு முன், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனக்கூறி, பிரசாரம் செய்தபோது, அதுகுறித்து விபரம் அறியாதோர், மாற்று கட்சியினர் பலர், வீட்டு மனை பட்டா சார்ந்த கோரிக்கை மனுக்களை அளிக்கவில்லை.இதனால், பட்டா கேட்டு, முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தவர்களின் இடத்தை மட்டும், வருவாய் துறையினர் நேரடியாக ஆய்வு செய்துவருகின்றனர். வருவாய் துறை அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பித்த மற்றவர்களின் மனுக்களை பரிசீலிப்பதில்லை.திருப்போரூர் வட்டத்தில், பலரும் பட்டா இல்லாமல் உள்ளனர். மக்கள் நலன் கருதி, பட்டா இல்லாத அனைவரின் இடத்தையும் ஆய்வு செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X