பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளரிடம் 'சில்மிஷம்' காஞ்சி மருத்துவர் இடமாற்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் பணியாளரிடம், பாலியல் தொந்தரவு செய்த ஓமியோபதி மருத்துவர், இடமாற்றம் செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், சித்தா பிரிவு அலுவலகத்தில், ரஞ்சிதா, 25, என்ற பெண், ஸ்ெடனோவாக பணிபுரிகிறார். இங்கு பணிபுரியும் ஓமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன், கடந்த மாதம் 18ம் தேதி, அலுவலகத்தில்

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் பணியாளரிடம், பாலியல் தொந்தரவு செய்த ஓமியோபதி மருத்துவர், இடமாற்றம் செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், சித்தா பிரிவு அலுவலகத்தில், ரஞ்சிதா, 25, என்ற பெண், ஸ்ெடனோவாக பணிபுரிகிறார். இங்கு பணிபுரியும் ஓமியோபதி மருத்துவர் முத்துகிருஷ்ணன், கடந்த மாதம் 18ம் தேதி, அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, ரஞ்சிதாவிடம் பாலியல் தொந்தரவு செய்தார்.இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமியிடம், பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்துள்ளார். இதன் முதற்கட்ட விசாரணைக்கு பின், பெண் பணியாளரிடம், பாலியல் தொந்தரவு செய்த முத்துகிருஷ்ணன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான விசாரணை, இன்று மதியம், 12:30 மணிக்கு, சித்தா அலுவலகத்தில் நடக்கிறது.பாலியல் புகார் விசாரணை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அய்யாசாமி முன்னிலையில் நடக்கிறது. அலுவலர் அய்யாசாமி மீது, 2017ல் பாலியல் புகார் கூறப்பட்டதால், அவர் நடத்தும் விசாரணை, பெயரளவில் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு. உண்மை நிலை வெளிவருவது கஷ்டம் தான்.முறையான விசாரணை நடத்த வேண்டுமானால், சென்னையில் இருந்து, அதே துறை உயர் அதிகாரிகள் அல்லது மற்ற துறை நிர்வாகிகள் விசாரிக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X