குறைந்த மின் அழுத்தத்தால் செரப்பணஞ்சேரியில் பாதிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்--குறைந்த மின் அழுத்தம் காரணமாக, செரப்பணஞ்சேரி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே செரப்பணஞ்சேரியில், 2,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் சாதனங்களை இயக்க முடியாமல், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, செரப்பணஞ்சேரி மக்கள் கூறியதாவது:செரப்பணஞ்சேரி ஊராட்சியைச்

ஸ்ரீபெரும்புதுார்--குறைந்த மின் அழுத்தம் காரணமாக, செரப்பணஞ்சேரி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.குன்றத்துார் ஒன்றியம், படப்பை அருகே செரப்பணஞ்சேரியில், 2,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் சாதனங்களை இயக்க முடியாமல், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, செரப்பணஞ்சேரி மக்கள் கூறியதாவது:செரப்பணஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த நாவலுாரில், ஓராண்டுக்கு முன், புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. நாவலுாரில் இருந்து பணப்பாக்கம் வழியே, 4.5 கி.மீ., துாரத்தில் உள்ள செரப்பணஞ்சேரிக்கு மின்சாரம் வழங்கியபோது, மின் அழுத்தம் சரியாக இருந்தது.இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன் இருந்து, நாவலுாரில் இருந்து காஞ்சிவாக்கம், வட்டம்பாக்கம், கட்டேரி கிராமம், சாவடி.வெள்ளேரிதாங்கல், வஞ்சுவாஞ்சேரி வழியாக, 15 கி.மீ., துாரம் சுற்றி கொண்டு, செரப்பணஞ்சேரிக்கு மாற்று வழியில் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.அன்று முதல், செரப்பணஞ்சேரியில், குறைந்த மின் அழுத்தம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் சாதன பொருட்கள் பழுதடைகின்றன. நாவலுாரில் இருந்து பணப்பாக்கம் வழியாக, செரப்பணஞ்சேரிக்கு மீண்டும் மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X