பொது செய்தி

தமிழ்நாடு

அரக்கோணம் - செங்கல்பட்டு மின் இருப்பு பாதை பராமரிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்-கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க, அரசு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வருகிறது. இதில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை, முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்கள், பல அலுவலகங்களுக்கு செல்வதற்கு சவுகரியமாக சில வழித்தடங்களில் மட்டுமே, அரசு பஸ்கள் மற்றுள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை

வாலாஜாபாத்-கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க, அரசு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்து வருகிறது. இதில், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை, முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்கள், பல அலுவலகங்களுக்கு செல்வதற்கு சவுகரியமாக சில வழித்தடங்களில் மட்டுமே, அரசு பஸ்கள் மற்றுள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில், திருமால்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:00 மணிக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, சென்னை கடற்கரை வரை ஒரு ரயில் இயக்கப்படுகிறது.அதேபோல், மாலை 6:00 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர் வரை, மற்றொரு ரயில் இயக்கப்படுகிறது. மதிய வேளையில் எந்த ஒரு ரயில்களும் இயக்கப்படுவதில்லை.குறைவான ரயில் இயக்கப்படுவதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் இருக்கும் மின் இருப்பு பாதையில், சில இடங்களில் மின் கசிவுகளை பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு பணிகளை, ரயில்வே ஊழியர்கள் நேற்று செய்தனர்.மின் கசிவு மற்றும் எர்த் என அழைக்கப்படும் நிலத்தடி தொடர் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.ஊரடங்கு தளர்விற்கு பின், அனைத்து ரயில்களும் இயக்குவதற்கு சவுகரியமாக இருக்கும் என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X