அரசியல் செய்தி

தமிழ்நாடு

'டிவி' விவாதம்: பா.ஜ., புறக்கணிப்பு?

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (158)
Share
Advertisement
சென்னை: 'டிவி' விவாதங்களில், தமிழக பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று மாலை நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி,
BJP, Bharatiya Janata Party, TV debate

சென்னை: 'டிவி' விவாதங்களில், தமிழக பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று மாலை நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா.எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், நடிகை குஷ்பு மற்றும் 'டிவி' விவாதங்களில் பங்கேற்பவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news


இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: 'டிவி' சானல்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில் பங்கேற்பவர்களுக்கு, தங்கள் கருத்தை தெரிவிக்க போதிய நேரம் கொடுப்பதில்லை. அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் போது, எதிர் தரப்பினர் பேச விடாமல், தங்களின் கருத்துக்களை கூறுவது போல், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிக்கின்றனர்.

அதை ஒழுங்குப்படுத்த வேண்டிய நெறியாளர்களும், நடுநிலையாளர்களாக இருப்பதில்லை. விவாதங்களில் பங்கேற்கும் பா.ஜ.,வினர், ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் நடத்தப்படுகின்றனர். எனவே, தற்காலிகமாக, 'டிவி' விவாத நிகழ்ச்சிகளில், பா.ஜ., சார்பில் யாரும் பங்கேற்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜூன்-202118:24:28 IST Report Abuse
A.George Alphonse இந்த டிவி விவாதமே வேஸ்ட். இதனால் ஒரு பயனும் இல்லை.
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
16-ஜூன்-202122:58:27 IST Report Abuse
G.Kirubakaran மிக சரியான முடிவு . அருமை
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
15-ஜூன்-202122:09:50 IST Report Abuse
dina இந்த முடிவு எடுக்க பாஜக விற்கு எதற்கு இவ்வோள நாட்கள் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X