பொது செய்தி

இந்தியா

டுவிட்டருக்கு தடைவிதித்த நிலையில், 'கூ' செயலியில் கணக்கு துவக்கியது நைஜீரிய அரசு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கூ' செயலியில், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், அரசு சார்பில் அதிகாரப்பூர்வ கணக்கு துவக்கப்பட்டுள்ளது.நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும்
KooApp, Nigeria, Official Account, TwitterBan, Koo, கூ, செயலி, நைஜீரியா, கணக்கு, டுவிட்டர்,தடை

புதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கூ' செயலியில், ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், அரசு சார்பில் அதிகாரப்பூர்வ கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து டுவிட்டருக்கு, நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கூ' செயலியின் பயன்பாடு, நைஜீரியாவில் அதிகரிக்க துவங்கியது. அந்த செயலியில், நைஜீரிய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து, 'கூ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறியுள்ளதாவது:நைஜீரிய அரசின் சார்பில் எங்கள் செயலியில் அதிகாரப்பூர்வமாக கணக்கு துவக்கப்பட்டுள்ளது. நைஜீரிய உள்நாட்டு மொழியிலும், இந்த செயலியை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தியாவைத் தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் நம் சிறகை விரித்துள்ளோம்.
இந்திய அரசின், தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தத்தில் கூறியுள்ள அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றியுள்ளோம். பல மொழிகளிலும் எங்கள் செயலியை பயன்படுத்தலாம். அதிக வசதிகளை ஏற்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த செய்தியை, அவர் டுவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
11-ஜூன்-202112:16:38 IST Report Abuse
visu முதலில் இந்தியா அரசாங்கம் மோகமாக கூ விறற்க்கு மாறவேண்டும் ட்விட்டரிலிருந்து வெளியேற வேண்டும் எதிர்ப்ப இல்லாமல் த்விட்டேர் போலி போராளிகளுக்கு போரடித்துவிடும்
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
11-ஜூன்-202111:12:28 IST Report Abuse
V GOPALAN TOO LATE. MODI shoud support
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11-ஜூன்-202110:51:55 IST Report Abuse
அசோக்ராஜ் அடப் போங்கய்யா. கூ தப்பித் தவறி வளர்ந்துட்டாலும் டுவிட்டர் ஒதுங்கிடுவானா? சிம்பிளா இந்த அப்ரமேயாவை விலைக்கு வாங்கிடுவான். இவனும் பணத்தாசையில் கூ'வை வித்துப்புடுவன். இந்திய அரசாங்கமே 51 சதவீத பங்கு வைத்துக் கொண்டால் ஒழிய எதையும் கண்ட்ரோல் பண்ண முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X