பொது செய்தி

தமிழ்நாடு

கோவை வனப்பகுதி 2,600 ஏக்கர் அதிகரிப்பு: சூழலியலாளர்கள், வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை கலெக்டரின் அறிவிக்கையால், மாவட்டத்தின் வனப்பகுதி, 2,600 ஏக்கர் அதிகரித்துள்ளது. 1949ம் ஆண்டு தனியார் வனச்சட்டப்படி, தமிழகத்தில் முதல் முறையாக யானை வலசைப்பாதை தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் என இரண்டு பிரிவாக வனப்பகுதிகள் அமைந்துள்ளன.வனத்தை ஒட்டியுள்ள தனியார் பட்டா நிலங்கள் மற்றும்
கோவை, வனப்பகுதி,  அதிகரிப்பு

கோவை கலெக்டரின் அறிவிக்கையால், மாவட்டத்தின் வனப்பகுதி, 2,600 ஏக்கர் அதிகரித்துள்ளது. 1949ம் ஆண்டு தனியார் வனச்சட்டப்படி, தமிழகத்தில் முதல் முறையாக யானை வலசைப்பாதை தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் என இரண்டு பிரிவாக வனப்பகுதிகள் அமைந்துள்ளன.வனத்தை ஒட்டியுள்ள தனியார் பட்டா நிலங்கள் மற்றும் தோட்டங்களில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளால் யானை உள்ளிட்ட வன உயிர்களின் வாழ்விடம் சுருங்கி, உணவுக்கும் நீருக்கும், அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.இதனால், யானை - மனித மோதல் அதிகரித்து, இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகின்றன. இதைத் தடுக்க பல்வேறு கமிட்டிகளை அரசு அமைத்தாலும், நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. யானைகளின் வலசைப்பாதைகளில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் அல்லது வன நிலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை, நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.


30 நாளில் அறிவிக்கை


கோவையில் வருவாய்த்துறை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள், வன நிலமாக அறிவிக்கப்படாததால், அங்கு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் வனத்துறைக்கு பல்வேறு தடைகள் உள்ளன. இதன் காரணமாக, கோவையில் வனத்தை ஒட்டியுள்ள இத்தகைய நிலங்களை வன நிலமாக அறிவிக்க வேண்டுமென்று, 2016-2017ம் ஆண்டிலேயே அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த மாதத்தில் மீண்டும் இந்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த கலெக்டர் நாகராஜன், வருவாய்த்துறை மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான, 1049 ஹெக்டேர் (2593 ஏக்கர்) நிலங்களை, தமிழ்நாடு வனச் சட்டம்-1882 பிரிவு 26ன் கீழ் வன நிலங்களாக அறிவித்து, முப்பதே நாட்களில் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.


தனியார் வனம்


தமிழகத்தின் மிக முக்கியமான கல்லார் - ஜக்கனாரை யானை வலசைப்பாதையை பாதுகாக்கும் விதத்தில், வனத்துக்கு நடுவே அமைந்துள்ள 50.79 ஹெக்டேர் (125 ஏக்கர்) தனியார் நிலங்களை, தமிழ்நாடு தனியார் வன நிலங்கள் பாதுகாப்புச் சட்டம் -1949ன் கீழ், தனியார் வனமாகவும் அறிவித்துள்ளார். இந்த சட்டத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக கல்லார் வலசைப்பாதைதான் தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, கோவை டி.எப்.ஓ., வெங்கடேசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.


latest tamil news



மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு இடங்களும், பொள்ளாச்சி தாலுகாவில் இரண்டு இடங்களும், ஆனைமலை தாலுகாவில் ஒரு இடமுமாக மொத்தம் ஒன்பது இடங்கள், வன நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கோவையின் வனப்பகுதி ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 215 ஹெக்டர் (3,01,871 ஏக்கர்) பரப்பில் இருந்து, ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 264 ஹெக்டர் (3,04,464 ஏக்கர்) பரப்பளவுக்கு உயர்ந்துள்ளது.

தனியார் நிலம், தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றை வனத்துறையின் அனுமதியின்றி விற்க முடியாது; அங்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாது. யானை - மனித மோதலைத் தடுக்கவும், கோவையின் வனப்பரப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என்பதால், சூழலியலாளர்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.


அமைச்சர் பாராட்டு


யானைகள் வழித்தடப் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்த கலெக்டர் நாகராஜனை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று நேரில் பாராட்டி புத்தகம் பரிசளித்தார். கோவை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறுகையில், ''வனம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பில், இது ஒரு முக்கியமான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம். யானைகளின் வலசைப்பாதைகளை மீட்டு, யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு, வனத்துறை எடுக்கும் பல்வேறு முயற்சிகளுக்கும், இது உறுதுணையாக இருக்கும் என்பது நிச்சயம்,'' என்றார்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
11-ஜூன்-202123:05:01 IST Report Abuse
PRAKASH.P Jakki இடமிருந்து எப்ப இடத்தை மீட்பு
Rate this:
sivan - seyyur,இந்தியா
12-ஜூன்-202103:13:29 IST Report Abuse
sivan காருண்யாவின் கபளீகரம் ஒழிக்கப்பட்ட பிறகு...
Rate this:
12-ஜூன்-202104:46:35 IST Report Abuse
மனுநீதிசெய்தி வனத்துறையின் கட்டுப்பாட்டில் தான் காடுகள் உள்ளதாக கூறுகிறது. அவர்களிடம் இல்லை என்று உனக்கு மட்டும் தெரிந்தால் வழக்கு போடு. நீதிமன்றம் மீட்டுக்கொடுக்கும்.மரங்களை வெட்டிக்கடத்தி கொள்ளை அடிப்பதற்கு சத்குருவின் ஆசிரமம் தடையாக உள்ளது. அதனால் சில திருடர்களுக்கு வயிறு எரிகிறது. உன்னைப்போன்ற முரசொலி வாசகர்களுக்கு அந்த உண்மையை தேடும் அறிவும் கிடையாது. அவர் நிலம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். தைரியம் இருந்தால் மதமாற்ற கூட்டத்தையும் அவர்களின் நிறுவனங்களின் நிலங்கள் பற்றிய ஆவணங்களையும் மக்கள் தெரிந்துகொள்ள இணையத்தில் வெளியிடச்சொல்......
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூன்-202117:50:41 IST Report Abuse
sridhar If that offending university is demolished it will be even greener.
Rate this:
Cancel
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூன்-202114:47:04 IST Report Abuse
Sakthi Parthasarathy திமுக அரசுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Truth Behind - Tamilnadu,இந்தியா
11-ஜூன்-202119:39:09 IST Report Abuse
Truth Behindசிரிப்பு சிரிப்பா வருதுங்கோ....
Rate this:
11-ஜூன்-202120:48:35 IST Report Abuse
மனுநீதிவந்து ஒரு மாதத்தில் மரம் இவ்வளவு பெரிசா வளந்திருக்கு...கேப்பையில் உண்மையிலேயே நெய் வடிகிறது போல உனக்கு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X