அரசியல் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து இல்லாத 3 ஊராட்சியில் கொரோனா இல்லை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஈரோடு : ''ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து, பயணம் இல்லாத மூன்று ஊராட்சிகளில், ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை,'' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் ஈரோட்டில் கூறியதாவது:நகரை விட கிராமங்களில் கொரோனா அதிகமாக பரவுவதால், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், மூன்று நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள,

ஈரோடு : ''ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து, பயணம் இல்லாத மூன்று ஊராட்சிகளில், ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை,'' என, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் கூறியதாவது:

நகரை விட கிராமங்களில் கொரோனா அதிகமாக பரவுவதால், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், மூன்று நாளாக சிறப்பு கவனம் செலுத்துகிறோம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 225 ஊராட்சிகளும், பக்கத்தில் உள்ள நகருடன் தொடர்பில் இருப்பதால், தொற்று ஏற்படுகிறது.

தொடர் நடவடிக்கையால், மூன்று ஊராட்சிகளில் ஒருவருக்கு கூட நோய் தொற்று இல்லை. இம்மூன்று ஊராட்சிகளிலும் பஸ் போக்குவரத்து, பிற வாகன பயணங்களுக்கு வழி இல்லை, என தெரியவந்தது. போக்குவரத்து வசதி, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில்தான் நோய் அதிகம் உள்ளதை அறிய முடிகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அமைச்சரிடம் ஒரு நிருபர், 'ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்கு, ஏழு லட்சம் ரூபாய் பில் செய்து, மூன்று லட்சம் ரூபாய் கட்டிவிட்டனர். அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தனர். நோயாளி இறந்தபின், நான்கு லட்சம் ரூபாய் செலுத்தினால்தான் உடலை தருவோம் என பேரம் பேசினர். அரசு நடவடிக்கை இல்லை' என கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், ''அரசு விதித்த சட்டத்துக்கு புறம்பாக ஒருவர் ஒரு காரியத்தில் ஈடுபட்டால், பத்திரிகையாளர்களே கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள செய்யலாம். என்னை பார்த்து கேள்வி கேட்பதால், பலன் கிடைக்காது. உங்களுக்கே அந்த விழிப்புணர்வு வரவில்லை. கலெக்டரை தினமும் சந்திப்பீர்கள். அதை சொல்ல ஏன் தயங்குகிறீர்கள். இனி இதுபோன்ற சம்பவங்களை, கலெக்டரிடம் உரிய நேரத்தில் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X