பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 5 லட்சம் தறிகள் முடக்கம் : அரசுகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம் : ஊரடங்கால் தமிழகத்தில், 5 லட்சம் தறிகள் முடங்கியதால், மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சிறு விசைத்தறி கைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர் சேவா சம்மேளன தலைவர் அப்பு செட்டியார், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்துள்ள ஜவுளி தொழிலில், 4 லட்சம் விசைத்தறிகள், லட்சம் கைத்தறிகள் உள்ளன. இதன்


சேலம் : ஊரடங்கால் தமிழகத்தில், 5 லட்சம் தறிகள் முடங்கியதால், மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறு விசைத்தறி கைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர் சேவா சம்மேளன தலைவர் அப்பு செட்டியார், நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்துள்ள ஜவுளி தொழிலில், 4 லட்சம் விசைத்தறிகள், லட்சம் கைத்தறிகள் உள்ளன. இதன் இயக்கம், பராமரிப்பு, ஜவுளி பரிமாற்றத்தில், நேரடியாக, 30 லட்சம் பேர், மறைமுகமாக, 20 லட்சம் பேர் ஈடுபட்டனர். ஊரடங்கால், 2020 மார்ச் இறுதி முதல், திருப்பூர், கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மதுரை, கோவை, விருதுநகர் மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி தொழில் கடும் பாதிப்பை சந்தித்தது.

கடந்த ஆண்டு, 10 மாதங்கள் தறிக்கூடங்கள் மூடலால், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜவுளிகள் தேக்காகி, 50 லட்சம் தொழிலாளர் வேலை இழந்தனர். கொரோனா முதல் அலை தாக்கம், கடந்த ஆண்டு டிசம்பரில் குறைந்த நிலையில், மத்திய அரசு, விவசாயிகள் நலன்கருதி, பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதித்ததால், நுால்கள் விலை கடுமையாக உயர்ந்து, ஜவுளி தொழிலில் மந்தநிலை காணப்பட்டது.

அந்நிலை, நடப்பாண்டு ஜனவரியில் நீங்கி, தொழில், 70 சதவீதம் மீண்ட நிலையில், சட்டசபை தேர்தலால், மார்ச், ஏப்ரலில், ஜவுளி பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டது. ஆனால், கடந்த மே, 10 முதல் ஊரடங்கால், தமிழகத்தில் உள்ள, 5 லட்சம் தறிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில், 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.அத்துடன், 2,500 கோடி ரூபாய் மதிப்பில், ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன.

வேலை இழந்தவர்களுக்கு, கடந்த ஆண்டு, தமிழக அரசு, 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது போன்று, தற்போதும் வழங்க வேண்டும். ஜவுளி தொழிலை காக்க, விசைத்தறி, கைத்தறி உரிமையாளர்கள், வங்கியில் பெற்ற கடனுக்கு வட்டி தள்ளுபடி, மாத தவணை செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X