அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கல்வெட்டு சேதம்: மா.செயலர் கடும் கண்டனம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருச்சி : திருச்சி அருகே அ.தி.மு.க., கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில், 2011ல் அமைக்கப்பட்ட அ.தி.மு.க., கொடியுடன் கூடிய கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டை நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் இடித்து நொறுக்கி உள்ளனர். இது நேற்று காலை அ.தி.மு.க.,வினருக்கு தெரிய வந்தது.


திருச்சி : திருச்சி அருகே அ.தி.மு.க., கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில், 2011ல் அமைக்கப்பட்ட அ.தி.மு.க., கொடியுடன் கூடிய கல்வெட்டு இருந்தது. இந்த கல்வெட்டை நேற்று முன்தினம் இரவு, மர்மநபர்கள் இடித்து நொறுக்கி உள்ளனர். இது நேற்று காலை அ.தி.மு.க.,வினருக்கு தெரிய வந்தது. இதனால் அங்கு அ.தி.மு.க.,வினர் கூடினர்.

அங்கு வந்த அந்தநல்லுார் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அழகேசன், பெட்டவாய்த்தலை போலீசில், கல்வெட்டை சேதப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அ.தி.மு.க., வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி வெளியிட்ட அறிக்கை:

ஏற்கனவே அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் பெயர்கள் பஸ்ஸ்டாப்புகளில் அழிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்டவாய்த்தலை அருகே கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X