பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக வேண்டும்: பியூஷ் கோயல்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை: இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவில் தொடர் மழையால், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. இதனால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில மும்பை புறநகர் ரயில்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மழையால் பாதிக்கப்படக்கூடிய
Mumbai, Heaviest Rainfall, Railway, PiyusGoyal, மும்பை, ரயில்வே, பருவமழை, பியூஷ் கோயல்

மும்பை: இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் தொடர் மழையால், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. இதனால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில மும்பை புறநகர் ரயில்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் தற்போதைய நிலை, ரயில்கள் சுமுகமாக இயங்குவதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.


latest tamil news


பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே பருவமழையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். பருவமழையின்போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளது. பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐஐடி மும்பை போன்ற நிறுவனங்களுடன் ரயில்வே துறை கைகோர்க்க வேண்டும். ரயில்களின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும், கடின உழைப்பும் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202118:39:47 IST Report Abuse
ஆப்பு பேசாம ரயில் தண்டவாளத்துக்கு பக்கத்தில் கால்வாய்களை வெட்டி படகு, கப்பல் போக்குவரத்து நடத்தலாம். கட்காரி ஐயாவைக் கேட்டா நல்ல திட்டம் தீட்டிக் குடுப்பாரு. மோடி ஐயா, அமித்ஷா ஐயா சென்று லட்சம் கோடிக்கான அடிக்கல் நாட்டிரலாம்.
Rate this:
Cancel
11-ஜூன்-202116:36:00 IST Report Abuse
ஆப்பு மழை அதிகமானால், ரயில்.பெட்டி கழிப்பறைகளில் பிடித்து வைக்கலாம் ஆக்சிஜன் ஸ்பெஷல் டாங்குகளில் தண்ணீர் நிரப்பி மழை இல்லாத மாநிலங்களுக்கு அனுப்பலாம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
11-ஜூன்-202116:16:24 IST Report Abuse
M  Ramachandran அமைதியாய் தூங்கி கொண்டிருக்கும் ஓடாது ரயிலுனுக்கு ஏன் பருவநிலையை பற்றி கவலை.எப்படியும் இருபிடிரெண்டாம் வருட மத்தியில் வரை ஓடு வது நிச்சயமில்லை. மேற்கொண்டும் அடுத்து ஆண்டு வரை இந்த லாக் டவ்ன் முடிய பாடில்லை.பிறகு துரு பிடித்த தண்டவாளங்கள் பவ்ட்டிகள் இன்ஜின்கள் ஏராளத்திற்கு வரபோகிறது. ஓடாததினால் நஷ்டம் காண்பிக்க வேலாண்டியதில்லை. ஆனால் என்ன செய்வது ஊழியர்களுக்கு தவறாமல் வருடத்திற்கு வருடம் பொஆனஸ் ஏற்றி கொடுத்து கொண்டிருப்பாதல் நஷ்டம் கணக்கு காட்டு வார்கள். ஆனால் பொன்ஸ் மட்டும் யேறிக்கொண்டே போகும். பெட்ரோலிய கம்பெனிகள் ஊழியர்களுக்கு கொட்டி கொடுக்கிறன்றதே சம்பளமும் போனஸும். அது போல் எல்லா மாநில அரசுகளும் ( ஈ பீ போன்று வெள்ளை யானை களை ) மக்கள் வேஷ்டிக்கை தான் பார்க்க முடியும். அவர்கள் பணம் போவதை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் அழ வேண்டியதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X