பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை அருங்காட்சியகத்தில் கோவை ஸ்டேஷன் பொருட்கள்

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தொண்டாமுத்துார் : கோவை மாவட்டத்தில் உள்ள, நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, பழமையான கதவு, கற்கள் உள்ளிட்ட பொருட்கள், சென்னை போலீஸ் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.சென்னையில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடத்தை, மாநில போலீஸ் அருங்காட்சியமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரில் உள்ள
Chennai,சென்னை

தொண்டாமுத்துார் : கோவை மாவட்டத்தில் உள்ள, நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, பழமையான கதவு, கற்கள் உள்ளிட்ட பொருட்கள், சென்னை போலீஸ் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னையில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடத்தை, மாநில போலீஸ் அருங்காட்சியமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரில் உள்ள நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் இருந்த, இரும்பு கதவு உள்ளிட்ட பொருட்கள் பெயர்த்து எடுத்து, சென்னை கொண்டு செல்லப்பட்டன.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டடம், 1812ம் ஆண்டு கட்டப்பட்டது. இதை, மாநில போலீஸ் அருங்காட்சியமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. கோவை மாவட்டம், தொண்டாமுத்துாரில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம், 1914ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த போலீஸ் ஸ்டேஷனில், கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு, ஜன்னல், கருங்கற்களை பெயர்த்து எடுத்து, சென்னை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்கிறோம்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-202113:04:30 IST Report Abuse
Gopalakrishnan S அதைப் பெயர்த்து எடுத்து சென்னையில்தான் காட்சிப்படுத்த வேண்டுமா ? பெயர்க்காமல் அங்கேயே காட்சிப்படுத்த முடியாதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X