பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் நடைபெறும் பராமரிப்பு பணி களையும், மாவட்டத்தின் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (11ம் தேதி) காலை ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகள், அதன் தரம் குறித்து
D.M.K,M.K.Stalin,Stalin,Thanjavur,தஞ்சாவூர்,தி.மு.க,ஸ்டாலின்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லணையில் நடைபெறும் பராமரிப்பு பணி களையும், மாவட்டத்தின் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் சுமார் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (11ம் தேதி) காலை ஆய்வு செய்து நடைபெற்று வரும் பணிகள், அதன் தரம் குறித்து அலுவலர்களிடமும் கேட்டறிந்தார். பின்னர் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், முதலை முத்து வாரி தூர்வாரும் பணியையும், பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


latest tamil news




ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இளைஞர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்பிக்கள் தஞ்சாவூர் பழனி மாணிக்கம், திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிஆர்பி ராஜா, நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, தூர்வாரும் பணி கண்காணிப்பாளர் பிரதீப் யாதவ், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து வல்லத்தில் உள்ள முதலைமுத்துவாரி வடிகாரில் நடக்கும் தூர்வாரும் பணிகளையும் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramanujan - Chennai,இந்தியா
12-ஜூன்-202109:25:21 IST Report Abuse
Ramanujan இன்று மேட்டூர் திறக்க படுகிறது. இன்னும் தூர் வருகிறார்களா? பேஷ் பேஷ். போன வருடம் இன்னம் முன்னரே தூர் வாரும்போது இவ்ர்கள் குறை சொன்னாரகள். கடைசி நிமிட வேலை. ஏமாற்றும் வேலை. பணம் பண்ணும் வேலை. இப்போது என்னவாம் ?
Rate this:
Cancel
12-ஜூன்-202108:28:23 IST Report Abuse
ravi chandran காவிரி ஆற்றில் பெரும் பகுதி மாயம். போலீஸ் விசாரணை நடத்த மறுப்பு.
Rate this:
Cancel
Aravon Soriyanin seedan - murasori,இந்தியா
12-ஜூன்-202105:51:24 IST Report Abuse
Aravon Soriyanin seedan இனிமே தண்ணி வந்த மாதிரி தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X