பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று ஏற்பட்டோருக்கு விரைவான சிகிச்சை; உறுதிப்படுத்த அமைச்சர் வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், ஊரக பகுதியில் கொரோனா தொற்று பரவல், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா சிகிச்சை

ஈரோடு: ஈரோட்டில், ஊரக பகுதியில் கொரோனா தொற்று பரவல், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா சிகிச்சை பகுதியில் வெளி நபர், உறவினர்கள், சம்மந்தம் இல்லாதவர்களை அனுமதிக்க கூடாது. அனைத்து துறையினர் ஒருங்கிணைந்து பணி மேற்கொள்வதுடன், தொற்று ஏற்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதி, படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக, 2,000க்கும் மேற்பட்ட படுக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் படுக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் செயல்பாட்டுடன் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலர் கோபால், கமிஷனர் பழனிசாமி, எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், திருமகன் ஈவெரா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X