பொது செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் 'டிராபிக் ஜாம்'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில், பழுதான லாரியால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து மரத்துண்டுகள் ஏற்றிய லாரி கோவைக்கு புறப்பட்டது. சத்தயமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் வந்தது. நேற்று மதியம், 12:00 மணியளவில், ஏழாவது கொண்டை ஊசி வளைவில், திரும்ப முடியாமல் பழுதாகி நின்றது. ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி, பால் மற்றும்

புன்செய்புளியம்பட்டி: திம்பம் மலைப்பாதையில், பழுதான லாரியால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து மரத்துண்டுகள் ஏற்றிய லாரி கோவைக்கு புறப்பட்டது. சத்தயமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் வந்தது. நேற்று மதியம், 12:00 மணியளவில், ஏழாவது கொண்டை ஊசி வளைவில், திரும்ப முடியாமல் பழுதாகி நின்றது. ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி, பால் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மட்டும், மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள், இருபுறமும் செல்ல முடியாமல் நின்றன. ஆசனூர் போலீசார், கிரேன் மூலம் லாரியை நகர்த்தி நிறுத்தினர். இதையடுத்து, மதியம், 2:00 மணிக்கு இரு மாநில போக்குவரத்து சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X